தமிழ் கூறும் நல்லுலகுக்கு தமிழில் ஒரு வலைத்தளம்.

Thursday, March 27, 2014

மலைபோல் உயர்ந்துவிட்ட மரணதண்டனை..




மலைபோல் உயர்ந்துவிட்ட மரணதண்டனை..






மனிதனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்றாலும் அவனது பிறப்பினையும் இறப்பினையும் தீர்மானிக்கும் வல்லமை அவனுக்கு இன்னும் இல்லை என்பது பொது விதி.. ஆயினும் இக்காலத்தில் இறப்பினை தீர்மானிப்பதோடு அல்லாமல் மனிதாபிமானம் அற்ற முறையில் உயிர்கள் பழி தீர்க்கப்படுதல் என்பது சர்வ சாதாரணமாகிப்போன விடயமாக உள்ளது.




மன்னிப்பு என்பதும் மனிதபிமானம் என்பதும் அற்றுப்போன இந்த காலத்தில் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளும் அமைப்புக்களும் இன்னும் அதனை நிலைனாட்ட போராடித்தான் வருகின்றன. ஆயினும் கடந்த காலங்களை விட இப்போது அதிகரித்துவரும் வன்முறைகளும் கொடுமைகளும் மனிதம் என்பது இல்லாமலேயே போய்விட்டதோ என்று என்னத்தோன்றுகின்றது.







அம்னெஸ்டி (AMNESTY) எனப்படும் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட சர்வதேச மரண தண்டனைகள் தொடர்பிலான அன்மைய அறிக்கை மிகவும் அதிர்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2013 ஆண்டில் சர்வதேச ரீதியில் இடம்பெற்ற மரண தண்டனைகளின் அளவு  மிகவும் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.இது கடந்த 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 15 % சதவீதம் அதிகரித்து கானப்படுவதாக சர்வதேச மண்ணிப்புச்சபையின் அறிக்கை சுட்டிகாட்டுகின்றது







கடந்த 2013 இல் 778 பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முன்னர் 2012 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 682 ஆக இருந்ததாக அறியப்பட்டுள்ளது.





உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சட்ட ரீதியான முறையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும் இறப்புக்களை பதிவு செய்தது வகையில் ஈரானும் ஈராக்குமே  முன்னைலை வகிப்பதாக அறியப்படுகின்றது.2013 ஆம் ஆண்டில் 369 பேர் ஈரானிலும், 169 பேர் ஈராக்கிலும் மரண தண்டனைக்கு உட்படுதப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







ஆயினும் மரண தண்டனை வழங்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவே முண்ணிலை வகிப்பது அறியப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் மக்களுக்கு மரண தண்டனைகளி விதித்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையில் குறிபிட்டு இருந்தது. ஆயினும் இது சட்டபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என அறியப்படுகின்றது.


மனிதாபிமானமற்ற முறையில் மக்கள் மெய் நிகராக மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்படுவது ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் சர்வ சாதாரனமாகி விட்டது. இந்த நிலை மிகவும் வெட்ககேடானதாக உள்ளது என சர்வதேஅ மன்னிப்புச்சபையின் பொதுச்செயலாளர் ஷலீல் ஷெட்டி தெரிவித்துள்ளர்.







குறைந்தளவிலான நாடுகளின் அரசுக்களே இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் மிகவும் அற்பத்தனமான காரணிகளுக்காக மணித படுகொலைகளை மேற்கொள்கின்றன. இவ்வாறு ஒருவரை அழிப்பதன் மூலம் அங்கு நிலவும் பிரச்சினையை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிட முடியாது என ஷலீல்  மேலும் தெரிவித்திருந்தார்.

மொத்தம் 22 நாடுகளில் கடந்த 2013 ஆம் ஆண்டு  மரணதண்டனை விதக்கப்பட்டு இருப்பது அறியப்படுகின்றது.






போதைபொருள் உபயோகம் மற்றும் கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றனவற்றுக்கே இவ்வாரு அதிகபட்சமான மரண தண்டனைகை விதிக்கப்பட்டு இருப்பது தெரிவிக்கப்பட்டு இருந்ததது.

தண்டனைகள் என்பது மனிதனை நல்வழிபடுத்தவே அன்றி அவனை இல்லதொழிக்க பயன்படுத்தப்படுவது வேதனைக்குறிய செயல். எவ்வாறாயினும் மன்னிக்க முடியா குற்றங்கள் செய்த மனிதத்தன்மையற்ற மிருகங்கள் வாழும் இந்த உலகில் சிறு குற்றங்களுக்காக உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருவதும் வேதனையே..






[Valid RSS]

0 comments:

Post a Comment