தமிழ் கூறும் நல்லுலகுக்கு தமிழில் ஒரு வலைத்தளம்.

Tuesday, September 30, 2014

வெள்ளித்திரையில் மீண்டும் மலரும் மனீஷா...



மீண்டு(ம் ).. மீண்டும் வா...


புற்று நோயில் இருந்து பூரன குணமடைந்த நடிகை மனீஷா கொய்ராலா மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

,மிக விரைவில் பிரபல இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தில் இவர் ஒப்பந்தமாகி இருப்பதாக அறியப்படுக்ன்றது.

மேற்படி திரைபடத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வரும் அதே நேரம்  இந்த திரைப்படத்திற்கான ஸ்கிரிப்டினை தற்போது மனீஷா வாசித்து வருவதாகவும் , ராஜ்குமார் சந்தோஷி மனீஷா கொய்ராலாவை திரைப்படத்தின் முன்னணி  கதாபாத்திரத்திற்கு முடிவு செய்தும் இருப்பதாக மனீஷாவின் உதவி மேலாளர் கோஷ் நாளிதழ் ஒன்றிற்கு தகவல் தந்துள்ளார்.

அத்தோடு ராஜ்குமார் சந்தோஷியின் இந்த திரைப்படத்தில் நடிகர் பங்கஜ் கபூரும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக மேலும்  அறியப்படுகின்றது .

இறுதியாக 2012 ஆம் ஆண்டு BOOTS RETURNS என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்த மனீஷா கடந்த இரண்டு ஆண்டு காலமாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தது அறிந்ததே.


முன்னர்2001 ஆம் ஆண்டு  ராஜ்குமார் சந்தோஷியின் "லஜ்ஜா" என்ற திரைப்படத்தில் மனிஷா முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார். அவ்வாறி இந்த திரைப்படமும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படமாக அமையும் என இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி தெரிவித்துள்ளார்.

சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக நோயில் இருந்து மீண்டு வந்த மனீஷா மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியான தகவலே .





Monday, September 29, 2014

கு"சு"ம்பர் சாமியின் பண்டிக்கைகால டார்கெட்டுக்கள் .



அடுத்த இலக்கு இத்தாலிய மருமகளா? அல்லது கலைஞரின் மகளா? 


அண்டை நாட்டில் அன்மைக்காலமாக நடக்கும் அலும்புகள் தொடர்பில் அவ்வப்போதான  வலைப்பேச்சு அலுப்பு தட்டாமல்  இருப்பது சிலருக்கு சிலிர்ப்பும் பலருக்கு கொதிப்புமாக இருக்கின்றது.


தமிழக முதல்வர் அம்மாவின் சிறைவாசமும் அங்கு ஏற்பட்ட திடீர் திருப்பங்களும் தொடர்பில் இந்திய அரசியல் பிரமுகர் சு.சாமிக்கு பெரும் ஆர்பரிப்பு இருப்பதாக பலரும் கருதுகின்றனர். இதனால் அ.தி.மு.க வினரும் அம்மாவின் விழுதுகளும் ஏகப்பட்ட கடுப்பில் இருப்பது தெரிந்ததே.

முதலில் தமிழகத்தின் சின்னம்மாவை குறிவைத்து முடிய அடுத்ததாக காங்கிரஸ் கட்சித்தலைவியான  பெரியம்மா சோனியாவை குறிவைப்பதாக இந்திய செய்தி ஊடகங்கள் தகவல்கள் கசியவிட்டுள்ளன.

இவரது மேன்முறையீடின் பின்னரான ஜெ.அம்மாவின் கைதினை தொடர்ந்து அவரிலும் அதிகம் பேசபட்டு வருகிறார் ஜனதா கட்ச்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

இது தொடர்பில் இந்திய நாளிதல் " தி ஹிந்து" வுக்கு இவர் அளித்த பிரத்தியேக பேட்டியில் மேற்படி விடயங்கள் அலசபட்டுள்ளன.

மேற்படி தீர்ப்பு தொடர்பில் " இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மை யான ஆதாரங்களை முன்வைத்து தான் மனு தாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது." என தமது கருத்தினை கூறியுள்ளார். சு.சாமி.


வழங்கப்பட்டுள்ள தீர்பிற்கு எதிராக ஜாமீன் கோரி  கர்நாடக உயர் நீதி மன்றத்தில் ஜெயலலிதாவும் , சசிகலாவும் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என அறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இவரது அடுத்த இலக்காக சோனியா- ராகுல் மீது தொடரப்பட்ட "நெஷனல் ஹெரால்ட்" வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடம்பெற வுள்ளதாகவும் , அதன் போதான தனது வாதத்தின் போது தகுந்த ஆதாரங்களை முன் வைக்கவும் இருப்பதாக சு.சாமி தெரிவித்துள்ளார்.

இது மாத்திரமன்றி "ஜெயலலிதா வழக்கு தீர்ப்பைப் போலவே 2ஜி வழக்கிலும் ராசா, கனிமொழி உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் தண்டனை பெறுவது நிச்சயம். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், என்னிடம் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை சேர்க்க மறுத்தது. வலுவான ஆதரத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கில் இருந்து ப.சிதம்பரம் தப்ப முடியாது." எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இன்று காலை அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து கொன்டது தொடர்பில் தமது டுவிட்டர் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த சு.சாமி, " விரைவில் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளலாம்" என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இது தவிர "JJ -JAIL FOR JAYALALITHA "  போன்ற இவரது டுவிட்டுக்கள் கருத்தை கவர்வதாக அமைந்தது .

ஆக, தசரா பண்டிகைக்கு ஜெயலலித்தா, கிருஸ்துமஸ்க்கு - சோனியா, அதனை தொடர்ந்து பொங்கலுக்கு - கனிமொழி என சு.சாமியின் இலக்குகள் பண்டிகைகால சிறப்பு வெளியீடுகளாக அனைத்து சூப்பர் ஹீரோக்களின் திரைப்பட  ரிலீஸ்களை  விட வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கிறோம் .

Friday, September 26, 2014

போட்டோசொப் கும்மியில் குதூகலித்த பெடரர்



ரொஜர் பெடரரின்  #டுவிட்டடொய்ங் 


பிரபல டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் தனது இந்திய ரசிகர்கள் "படைப்புணர்வு" கொண்டவர்கள் என்று பாராட்டி தமது சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார்.





எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் #IPTL  எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டென்னிஸ் போட்டித்தொடர் இடம்பெறவிருப்பது  அறிந்ததே , இதன் போது பிரபல டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளார் என அறியப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் தமது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் குறித்த விஜயத்தின் போது  ஓரிரு நாட்கள் மட்டுமே தாம் இந்தியாவில் தங்க விருப்பதாகவும், அதன் போது  இந்தியாவில் எந்தெந்த இடங்கள் தாம் பார்க்க வேண்டும் என ரசிகர்களிடம் பரிந்துரைக்குமாறும் அவர் முன்னர் தகவல் வெளியிட்டு இருந்தார்.






இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலர் அவரது டுவிட்டர் வலைத்தளத்தில்
அவரது படங்களை இந்தியாவின் பிரசித்திபெற்ற இடங்களின் படங்களுடன் அவரது இந்திய ரசிகர்கள் கத்தரித்து இணைத்து வெளியிட்ட பின்னர் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.






இந்த செயற்கையாக உருவாக்கப்பட்ட படங்கள் அவர் இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா இடங்களான, தாஜ்மஹால் போன்றவற்றின் முன் அவர் நிற்பது போலவும், பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களுடன் நடனமாடுவது போலவும், ஹோலி பண்டிகையில் கலந்து கொள்வது போலவும், கங்கை நதியில் குளிப்பது போலவும் காட்டுகின்றன.


படங்கள் இணைப்பு :