தமிழ் கூறும் நல்லுலகுக்கு தமிழில் ஒரு வலைத்தளம்.

Thursday, March 27, 2014

மலைபோல் உயர்ந்துவிட்ட மரணதண்டனை..




மலைபோல் உயர்ந்துவிட்ட மரணதண்டனை..






மனிதனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்றாலும் அவனது பிறப்பினையும் இறப்பினையும் தீர்மானிக்கும் வல்லமை அவனுக்கு இன்னும் இல்லை என்பது பொது விதி.. ஆயினும் இக்காலத்தில் இறப்பினை தீர்மானிப்பதோடு அல்லாமல் மனிதாபிமானம் அற்ற முறையில் உயிர்கள் பழி தீர்க்கப்படுதல் என்பது சர்வ சாதாரணமாகிப்போன விடயமாக உள்ளது.




மன்னிப்பு என்பதும் மனிதபிமானம் என்பதும் அற்றுப்போன இந்த காலத்தில் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளும் அமைப்புக்களும் இன்னும் அதனை நிலைனாட்ட போராடித்தான் வருகின்றன. ஆயினும் கடந்த காலங்களை விட இப்போது அதிகரித்துவரும் வன்முறைகளும் கொடுமைகளும் மனிதம் என்பது இல்லாமலேயே போய்விட்டதோ என்று என்னத்தோன்றுகின்றது.







அம்னெஸ்டி (AMNESTY) எனப்படும் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட சர்வதேச மரண தண்டனைகள் தொடர்பிலான அன்மைய அறிக்கை மிகவும் அதிர்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2013 ஆண்டில் சர்வதேச ரீதியில் இடம்பெற்ற மரண தண்டனைகளின் அளவு  மிகவும் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.இது கடந்த 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 15 % சதவீதம் அதிகரித்து கானப்படுவதாக சர்வதேச மண்ணிப்புச்சபையின் அறிக்கை சுட்டிகாட்டுகின்றது







கடந்த 2013 இல் 778 பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முன்னர் 2012 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 682 ஆக இருந்ததாக அறியப்பட்டுள்ளது.





உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சட்ட ரீதியான முறையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும் இறப்புக்களை பதிவு செய்தது வகையில் ஈரானும் ஈராக்குமே  முன்னைலை வகிப்பதாக அறியப்படுகின்றது.2013 ஆம் ஆண்டில் 369 பேர் ஈரானிலும், 169 பேர் ஈராக்கிலும் மரண தண்டனைக்கு உட்படுதப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







ஆயினும் மரண தண்டனை வழங்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவே முண்ணிலை வகிப்பது அறியப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் மக்களுக்கு மரண தண்டனைகளி விதித்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையில் குறிபிட்டு இருந்தது. ஆயினும் இது சட்டபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என அறியப்படுகின்றது.


மனிதாபிமானமற்ற முறையில் மக்கள் மெய் நிகராக மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்படுவது ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் சர்வ சாதாரனமாகி விட்டது. இந்த நிலை மிகவும் வெட்ககேடானதாக உள்ளது என சர்வதேஅ மன்னிப்புச்சபையின் பொதுச்செயலாளர் ஷலீல் ஷெட்டி தெரிவித்துள்ளர்.







குறைந்தளவிலான நாடுகளின் அரசுக்களே இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் மிகவும் அற்பத்தனமான காரணிகளுக்காக மணித படுகொலைகளை மேற்கொள்கின்றன. இவ்வாறு ஒருவரை அழிப்பதன் மூலம் அங்கு நிலவும் பிரச்சினையை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிட முடியாது என ஷலீல்  மேலும் தெரிவித்திருந்தார்.

மொத்தம் 22 நாடுகளில் கடந்த 2013 ஆம் ஆண்டு  மரணதண்டனை விதக்கப்பட்டு இருப்பது அறியப்படுகின்றது.






போதைபொருள் உபயோகம் மற்றும் கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றனவற்றுக்கே இவ்வாரு அதிகபட்சமான மரண தண்டனைகை விதிக்கப்பட்டு இருப்பது தெரிவிக்கப்பட்டு இருந்ததது.

தண்டனைகள் என்பது மனிதனை நல்வழிபடுத்தவே அன்றி அவனை இல்லதொழிக்க பயன்படுத்தப்படுவது வேதனைக்குறிய செயல். எவ்வாறாயினும் மன்னிக்க முடியா குற்றங்கள் செய்த மனிதத்தன்மையற்ற மிருகங்கள் வாழும் இந்த உலகில் சிறு குற்றங்களுக்காக உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருவதும் வேதனையே..






Wednesday, March 26, 2014

Indian car makers raise prices .will affect to SL market?


எகிறும் கார்களின் விலை, "டாட்டா" காருக்கு டாட்ட காட்ட வேண்டியதுதான்.





இந்திய வாகன சந்தையில் மாருதி, டாட்டா, ஹொன்டா மற்றும் மஹிந்ரா கார்களின் விலைகள் மந்தமான சந்தை நிலை காரணமாக இவ்வருடத்தில் மூன்றாவது முறையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்திய அரசாங்கம் கடந்த வருடம் கார்கள் மற்றும் விளையாட்டு வாகன உற்பத்திக்கான கலால் வரியினை 6 வீதமாக குறைத்தே இருந்தது , எனினும் எரிபொருள் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலைகள் உலக சந்தையில் அதிகரித்து காணப்படுவதால் கார் உற்பத்தியில் பாரிய சிக்கல்களை முகம்கொள்ளவேண்டி இருப்பதாக உற்பத்தி நிறுவனங்கள் விசனம் தெரிவித்துள்ளன




வாகன தயாரிப்பாளர்கள் தமது உற்பத்தியின் விலைகளை  10000 இந்திய ரூபாய் அளவில் கடந்த வருடம் குறைத்தே விற்பனை செய்ததாக அறியப்படுகின்றது. ஆயினும் விற்பனையை பொருத்தளவில் இவ்வருடம் தொடங்கி  கடந்த பெப்ரவரி மாதம் வரையிலான கணக்கெடுப்பின் படி  2.17 லட்சம் அலகுகளின் விற்பனை 4% மான சரிவினை காட்டுவதாகவும், அவ்வாறே கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையிலான 11 மாதகால விற்பனையின் படி  22.65 லட்சம் அலகுகளின் விற்பனை 6% சரிவினை காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த விலையேற்றத்தின் விளைவு இலங்கை சந்தையிலும் மேலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகின்றது, எவ்வாறாயினும் இலங்கை சந்தையில் இந்திய வாகன விற்பனை ஒப்பீட்டளவில் கணிசமான அளவில் குறைவாகவே அன்மைகாலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.






Tuesday, March 25, 2014

வளிமாசடைவதால் வருடதிற்கு 7 மில்லியன் உயிர்கள் இறப்பு





உலகளாவிய ரீதியில் வருடத்திற்கு 7 மில்லியன் மக்கள் வளிமாசடைவதன் காரணமாக இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.



கடந்த 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி உலக சனத்தொகயில் 7 மில்லியன் மக்கள் தொகயினர் சுவாசபுற்றுநோய் உள்ளிட்ட வளி மாசடைவதன் முக்கிய காரணிகளால் இறப்பதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.



இவற்றி அதிகளவிலான , சுமார் 6 மில்லியன் மக்கள் தொகையினர்  தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பிரதேசங்களிலேயே இறப்பதாக அறியப்பட்டுள்ளது.





மேற்படி கணக்கெடுப்பின் படி சுமார் 3.3 மில்லியன் மக்கள் தொகையினர் உள்ளக வளி மாசடைவதாலும் , 2.6 மில்லியன் மகள் வெளிப்புற வளி மாசு காரணமாகவும் இறந்திருக்கும் அதே வேளை, இவர்களில் அதிகளவிலானோர் குறைந்த வருமானம் பெறக்கூடிய நடுத்தார மக்கள் வர்க்கத்தினரே என ஆய்வில் அறியப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொது சுகாதாரம், சுற்றுசூழல் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர்: வைத்தியர் மரியா நேஹ்ரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளர்.





உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்  படி வெளிப்புற வளி மாசடைவதன் காரணமாக ஏற்படும் உபாதைகளும் அதனால் மரணித்தவர்களின் வீதமும்

40% - இதய நோய்
40% - பக்கவாதம்
11% - நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ( சிஓபிடி )
6% - நுரையீரல் புற்றுநோய்
3 % - குழந்தைகளின் கடுமையான குறைந்த சுவாச நோய்


உட்புற மாசு தொடர்பான மரணங்கள்

34% - பக்கவாதம்
26% - இதய நோய்
22 % - சிஓபிடி
12% - குழந்தைகளின் கடுமையான குறைந்த சுவாச நோய்
6% - நுரையீரல் புற்றுநோய்.









"Thala " South indian tamil industry's ULTIMATE STAR Ajithkumar's golden heart: "'தல'யின் தங்க மனசு! (Test post)


ஒரு நடிகராக பலரைக் கவர்ந்தைதை விட, சக மனிதர்களுக்கு உதவி செய்வதினால் நல்ல மனிதராக அஜித்தை அதிகமானோருக்குப் பிடிக்கும். அதிலும் அதனை விளம்பரப்படுத்துதையும் விரும்பாதவர். 
இந்நிலையில் கேளம்பாக்கத்திற்கு அருகில் 12 கிரவுண்ட் நிலத்தை வாங்கி, தன்னிடம் வேலை பார்க்கும் 12 பேருக்கு கொடுத்தார்.
இடம் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், அந்த நிலத்தில் சொந்த செலவிலேயே வீட்டையும் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
 
அதுமட்டுமல்ல, இந்த இடமும் வீடும் தான் வாங்கிக் கொடுத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொண்டாராம்.
விளம்பரத்தை விரும்பி பலரும் உதவி செய்யும் வேளையில், உதவி செய்தது நான் தான் என வெளியில் செல்லாதீர்கள் என கேட்டுக்கொள்ளும் மனம் உள்ளவர் தான் அஜித். தல தல தான்!

மலேஷிய விமான விபத்து; எதிர்பாராததும் எதிர்வினையானதும்


மலேஷிய விமான விபத்து; எதிர்பாராததும் எதிர்வினையானதும்



இவ்வருடத்தில் உலகளாவிய ரீதியில் அனைவரினதும் கவனத்தை  ஈர்த்த நிகழ்வாக மலேஷிய விமான விபத்தினை கூறலாம். உல்லாசமாக பயணிக்க தொடங்கிய  227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள்  உயிர்கள் உத்தரவாதமின்றி காவுகொள்ளப்பட்ட துயர சம்பவம் யாராலும் எளிதில் மறந்துவிடமுடியா நிகழ்வானது. இவ்வருடத்தின் மாறா வடுவை ஏற்படுத்தி சென்றுள்ளது #MH370



**MH370 விமானத்தில் பயனித்தோரின் புகைப்படங்களின் தொகுப்பு.





கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேஷியாவில் இருந்து 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் காணாமல் போனதாக அறியப்பட்ட #MH370 விமானம் தொடர்பில் பல்வேறு விதமாக, பல்வேறு ஊடகங்களின் மூலமும் என்னிலடங்கா தரவுகள் தருவிக்கபட்டிருந்தாலும் காணாமல் போன 239 பயணிகளும் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என உலக மக்களின் பிரார்த்தனையாக கடந்த காலங்களில் இருந்தது. ஆயினும் நேற்றைய தினம் மலேஷிய செய்தி ஊடகங்கள் வெளியிட்ட உத்தியோகபூர்வ செய்தி குறிப்பினை தொடந்து பயணிகளின் உறவுகள் மட்டுமன்றி உலக மக்களின் மனதிலும் சோகம் ஆட்கொன்டமை மறுப்பின்றிய உண்மை.




ஏற்கனவே விரல் விட்டு என்னக்கூடிய அளவில் பல விமான விபத்துக்கள் , விமானம் கானாமல் போதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்து இருந்தாலும் , எதிர்பாராத விதத்தில் அமைந்துவிட்ட  இந்த நிகழ்வு தொடர்பில் பலவகை சர்ச்சைகளும் எதிர்மறையானதுமான எத்தனையோ தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.








எது எவ்வாறாயினும் உண்மையில்  நடந்தது என்ன என்பது இன்னும் அவிழ்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது. என்ன நடந்தது , எவ்வாறு நடந்தது என்பதை விட மேற்படி விமானத்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்ட அனைவரினது குடும்பத்திற்கும் பதில் கூர வேண்டியதுவே முக்கியம் வாய்ந்ததாக மலேஷிய விமானத்தின் நிறைவேற்று அதிகாரி டன் ஸ்ரி மொகமெட் நோர் மொகமட்  யூசுப்    இன்று வெளியிட்ட உத்யோகபூர்வ செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


 * மலேஷியன் ஏர்லைன்ஸ் பொறுப்பதிகாரியின் உத்யோகபூர்வ செய்தியறிக்கை மற்றும் தொடர்பு இலக்கங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

** விமானத்தில் பயணித்தோர் பெயர் பட்டியல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.



இந்த அசம்பாவிதம் தொடர்பில் மலேஷிய விமான பொறுப்பதிகாரி, அவுஸ்திரேலிய இராணுவ தரப்பினர் மற்றும் பாதுகாப்பு செயலகம் உள்ளிட்டோரின் உத்யோகபூர்வ அறிக்கியில் குறிபிடப்பட்டிருக்கும் சில விடயங்கள் :

1. மலேஷியன் ஏர்லைன்ஸ் விமான நிறைவேற்று அதிகாரி நோர் முகமட் யூசுப்பின் அறிக்கை துளிகள்

# இந்த பயங்கரமான துயர சம்பவம் ஏன் எவ்வாறு இடம்பெற்றது என்று எமக்கு தெரியவில்லை

# MH370 விமானம் காணாமல் போன விடயம் தொடர்பில் எமது மலேஷியன் ஏர்லைன்ஸ் விமான குழுவினர் பலத்த சவாலை எதிர்நேக்கவேண்டி இருக்கின்றது.

# எவ்வாறாயினும் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் .இப்பிரச்சினையை  ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்

# இந்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் நாம் தொடந்தும் எமது ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் நல்குவோம்.

# மேற்படி அசம்பாவிதமானது எதிர்பாராததும் எதிர்வினையானதுமாகும்.

# இந்த சம்பவம் தொடர்பில் விமானத்தில் பயனித்தோரின் உறவுகளுக்கு ஆறுதலும் இழப்பீடும் வழங்கிடலாம். ஆயினும் அவர்களின் உறவுகளுக்கு இந்த  இழப்பானது  ஈடுசெய்ய முடியாதது என்பதை உணர்கின்றோம்.

# மேற்படி MH370 விமானத்திற்கு நேர்ந்த கதி என்ன என்பதனை யூகிக்கவோ ஆராய்வதயோ நாம் கவனத்திற்கொள்ளவில்லை, மாறாக எமது கவனம் அதில் பயனித்தோரின் உறவுகள் தொடர்பிலேயே உள்ளது.

# அவர்களின் குடும்பங்கள் தொடர்பில் எமது மலேஷியன் ஏர்லைன்ஸ் விமான குழு அவர்களின் தார்மீக கடைமைகளை நிறைவேற்றுவதை கவனத்திற் கொள்கின்றது.

# மேற்படி MH370 விமானத்தில் பயணித்த 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் குடும்பன்களுக்கும் தலா 5000USD அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாக வழங்க முன்வந்துள்ளோம்