தமிழ் கூறும் நல்லுலகுக்கு தமிழில் ஒரு வலைத்தளம்.

Monday, September 29, 2014

கு"சு"ம்பர் சாமியின் பண்டிக்கைகால டார்கெட்டுக்கள் .



அடுத்த இலக்கு இத்தாலிய மருமகளா? அல்லது கலைஞரின் மகளா? 


அண்டை நாட்டில் அன்மைக்காலமாக நடக்கும் அலும்புகள் தொடர்பில் அவ்வப்போதான  வலைப்பேச்சு அலுப்பு தட்டாமல்  இருப்பது சிலருக்கு சிலிர்ப்பும் பலருக்கு கொதிப்புமாக இருக்கின்றது.


தமிழக முதல்வர் அம்மாவின் சிறைவாசமும் அங்கு ஏற்பட்ட திடீர் திருப்பங்களும் தொடர்பில் இந்திய அரசியல் பிரமுகர் சு.சாமிக்கு பெரும் ஆர்பரிப்பு இருப்பதாக பலரும் கருதுகின்றனர். இதனால் அ.தி.மு.க வினரும் அம்மாவின் விழுதுகளும் ஏகப்பட்ட கடுப்பில் இருப்பது தெரிந்ததே.

முதலில் தமிழகத்தின் சின்னம்மாவை குறிவைத்து முடிய அடுத்ததாக காங்கிரஸ் கட்சித்தலைவியான  பெரியம்மா சோனியாவை குறிவைப்பதாக இந்திய செய்தி ஊடகங்கள் தகவல்கள் கசியவிட்டுள்ளன.

இவரது மேன்முறையீடின் பின்னரான ஜெ.அம்மாவின் கைதினை தொடர்ந்து அவரிலும் அதிகம் பேசபட்டு வருகிறார் ஜனதா கட்ச்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

இது தொடர்பில் இந்திய நாளிதல் " தி ஹிந்து" வுக்கு இவர் அளித்த பிரத்தியேக பேட்டியில் மேற்படி விடயங்கள் அலசபட்டுள்ளன.

மேற்படி தீர்ப்பு தொடர்பில் " இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மை யான ஆதாரங்களை முன்வைத்து தான் மனு தாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது." என தமது கருத்தினை கூறியுள்ளார். சு.சாமி.


வழங்கப்பட்டுள்ள தீர்பிற்கு எதிராக ஜாமீன் கோரி  கர்நாடக உயர் நீதி மன்றத்தில் ஜெயலலிதாவும் , சசிகலாவும் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என அறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இவரது அடுத்த இலக்காக சோனியா- ராகுல் மீது தொடரப்பட்ட "நெஷனல் ஹெரால்ட்" வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடம்பெற வுள்ளதாகவும் , அதன் போதான தனது வாதத்தின் போது தகுந்த ஆதாரங்களை முன் வைக்கவும் இருப்பதாக சு.சாமி தெரிவித்துள்ளார்.

இது மாத்திரமன்றி "ஜெயலலிதா வழக்கு தீர்ப்பைப் போலவே 2ஜி வழக்கிலும் ராசா, கனிமொழி உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் தண்டனை பெறுவது நிச்சயம். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், என்னிடம் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை சேர்க்க மறுத்தது. வலுவான ஆதரத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கில் இருந்து ப.சிதம்பரம் தப்ப முடியாது." எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இன்று காலை அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து கொன்டது தொடர்பில் தமது டுவிட்டர் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த சு.சாமி, " விரைவில் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளலாம்" என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இது தவிர "JJ -JAIL FOR JAYALALITHA "  போன்ற இவரது டுவிட்டுக்கள் கருத்தை கவர்வதாக அமைந்தது .

ஆக, தசரா பண்டிகைக்கு ஜெயலலித்தா, கிருஸ்துமஸ்க்கு - சோனியா, அதனை தொடர்ந்து பொங்கலுக்கு - கனிமொழி என சு.சாமியின் இலக்குகள் பண்டிகைகால சிறப்பு வெளியீடுகளாக அனைத்து சூப்பர் ஹீரோக்களின் திரைப்பட  ரிலீஸ்களை  விட வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கிறோம் .

[Valid RSS]

0 comments:

Post a Comment