தமிழ் கூறும் நல்லுலகுக்கு தமிழில் ஒரு வலைத்தளம்.

Tuesday, March 25, 2014

மலேஷிய விமான விபத்து; எதிர்பாராததும் எதிர்வினையானதும்


மலேஷிய விமான விபத்து; எதிர்பாராததும் எதிர்வினையானதும்



இவ்வருடத்தில் உலகளாவிய ரீதியில் அனைவரினதும் கவனத்தை  ஈர்த்த நிகழ்வாக மலேஷிய விமான விபத்தினை கூறலாம். உல்லாசமாக பயணிக்க தொடங்கிய  227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள்  உயிர்கள் உத்தரவாதமின்றி காவுகொள்ளப்பட்ட துயர சம்பவம் யாராலும் எளிதில் மறந்துவிடமுடியா நிகழ்வானது. இவ்வருடத்தின் மாறா வடுவை ஏற்படுத்தி சென்றுள்ளது #MH370



**MH370 விமானத்தில் பயனித்தோரின் புகைப்படங்களின் தொகுப்பு.





கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேஷியாவில் இருந்து 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் காணாமல் போனதாக அறியப்பட்ட #MH370 விமானம் தொடர்பில் பல்வேறு விதமாக, பல்வேறு ஊடகங்களின் மூலமும் என்னிலடங்கா தரவுகள் தருவிக்கபட்டிருந்தாலும் காணாமல் போன 239 பயணிகளும் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என உலக மக்களின் பிரார்த்தனையாக கடந்த காலங்களில் இருந்தது. ஆயினும் நேற்றைய தினம் மலேஷிய செய்தி ஊடகங்கள் வெளியிட்ட உத்தியோகபூர்வ செய்தி குறிப்பினை தொடந்து பயணிகளின் உறவுகள் மட்டுமன்றி உலக மக்களின் மனதிலும் சோகம் ஆட்கொன்டமை மறுப்பின்றிய உண்மை.




ஏற்கனவே விரல் விட்டு என்னக்கூடிய அளவில் பல விமான விபத்துக்கள் , விமானம் கானாமல் போதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்து இருந்தாலும் , எதிர்பாராத விதத்தில் அமைந்துவிட்ட  இந்த நிகழ்வு தொடர்பில் பலவகை சர்ச்சைகளும் எதிர்மறையானதுமான எத்தனையோ தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.








எது எவ்வாறாயினும் உண்மையில்  நடந்தது என்ன என்பது இன்னும் அவிழ்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது. என்ன நடந்தது , எவ்வாறு நடந்தது என்பதை விட மேற்படி விமானத்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்ட அனைவரினது குடும்பத்திற்கும் பதில் கூர வேண்டியதுவே முக்கியம் வாய்ந்ததாக மலேஷிய விமானத்தின் நிறைவேற்று அதிகாரி டன் ஸ்ரி மொகமெட் நோர் மொகமட்  யூசுப்    இன்று வெளியிட்ட உத்யோகபூர்வ செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


 * மலேஷியன் ஏர்லைன்ஸ் பொறுப்பதிகாரியின் உத்யோகபூர்வ செய்தியறிக்கை மற்றும் தொடர்பு இலக்கங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

** விமானத்தில் பயணித்தோர் பெயர் பட்டியல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.



இந்த அசம்பாவிதம் தொடர்பில் மலேஷிய விமான பொறுப்பதிகாரி, அவுஸ்திரேலிய இராணுவ தரப்பினர் மற்றும் பாதுகாப்பு செயலகம் உள்ளிட்டோரின் உத்யோகபூர்வ அறிக்கியில் குறிபிடப்பட்டிருக்கும் சில விடயங்கள் :

1. மலேஷியன் ஏர்லைன்ஸ் விமான நிறைவேற்று அதிகாரி நோர் முகமட் யூசுப்பின் அறிக்கை துளிகள்

# இந்த பயங்கரமான துயர சம்பவம் ஏன் எவ்வாறு இடம்பெற்றது என்று எமக்கு தெரியவில்லை

# MH370 விமானம் காணாமல் போன விடயம் தொடர்பில் எமது மலேஷியன் ஏர்லைன்ஸ் விமான குழுவினர் பலத்த சவாலை எதிர்நேக்கவேண்டி இருக்கின்றது.

# எவ்வாறாயினும் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் .இப்பிரச்சினையை  ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்

# இந்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் நாம் தொடந்தும் எமது ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் நல்குவோம்.

# மேற்படி அசம்பாவிதமானது எதிர்பாராததும் எதிர்வினையானதுமாகும்.

# இந்த சம்பவம் தொடர்பில் விமானத்தில் பயனித்தோரின் உறவுகளுக்கு ஆறுதலும் இழப்பீடும் வழங்கிடலாம். ஆயினும் அவர்களின் உறவுகளுக்கு இந்த  இழப்பானது  ஈடுசெய்ய முடியாதது என்பதை உணர்கின்றோம்.

# மேற்படி MH370 விமானத்திற்கு நேர்ந்த கதி என்ன என்பதனை யூகிக்கவோ ஆராய்வதயோ நாம் கவனத்திற்கொள்ளவில்லை, மாறாக எமது கவனம் அதில் பயனித்தோரின் உறவுகள் தொடர்பிலேயே உள்ளது.

# அவர்களின் குடும்பங்கள் தொடர்பில் எமது மலேஷியன் ஏர்லைன்ஸ் விமான குழு அவர்களின் தார்மீக கடைமைகளை நிறைவேற்றுவதை கவனத்திற் கொள்கின்றது.

# மேற்படி MH370 விமானத்தில் பயணித்த 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் குடும்பன்களுக்கும் தலா 5000USD அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாக வழங்க முன்வந்துள்ளோம்














[Valid RSS]

0 comments:

Post a Comment