தமிழ் கூறும் நல்லுலகுக்கு தமிழில் ஒரு வலைத்தளம்.

Wednesday, March 26, 2014

Indian car makers raise prices .will affect to SL market?


எகிறும் கார்களின் விலை, "டாட்டா" காருக்கு டாட்ட காட்ட வேண்டியதுதான்.





இந்திய வாகன சந்தையில் மாருதி, டாட்டா, ஹொன்டா மற்றும் மஹிந்ரா கார்களின் விலைகள் மந்தமான சந்தை நிலை காரணமாக இவ்வருடத்தில் மூன்றாவது முறையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்திய அரசாங்கம் கடந்த வருடம் கார்கள் மற்றும் விளையாட்டு வாகன உற்பத்திக்கான கலால் வரியினை 6 வீதமாக குறைத்தே இருந்தது , எனினும் எரிபொருள் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலைகள் உலக சந்தையில் அதிகரித்து காணப்படுவதால் கார் உற்பத்தியில் பாரிய சிக்கல்களை முகம்கொள்ளவேண்டி இருப்பதாக உற்பத்தி நிறுவனங்கள் விசனம் தெரிவித்துள்ளன




வாகன தயாரிப்பாளர்கள் தமது உற்பத்தியின் விலைகளை  10000 இந்திய ரூபாய் அளவில் கடந்த வருடம் குறைத்தே விற்பனை செய்ததாக அறியப்படுகின்றது. ஆயினும் விற்பனையை பொருத்தளவில் இவ்வருடம் தொடங்கி  கடந்த பெப்ரவரி மாதம் வரையிலான கணக்கெடுப்பின் படி  2.17 லட்சம் அலகுகளின் விற்பனை 4% மான சரிவினை காட்டுவதாகவும், அவ்வாறே கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையிலான 11 மாதகால விற்பனையின் படி  22.65 லட்சம் அலகுகளின் விற்பனை 6% சரிவினை காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த விலையேற்றத்தின் விளைவு இலங்கை சந்தையிலும் மேலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகின்றது, எவ்வாறாயினும் இலங்கை சந்தையில் இந்திய வாகன விற்பனை ஒப்பீட்டளவில் கணிசமான அளவில் குறைவாகவே அன்மைகாலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.






[Valid RSS]

0 comments:

Post a Comment